உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் பாம்புகள் வருகை: ஊழியர்கள் அச்சம்

ரயில் நிலைய பார்சல் அலுவலகத்தில் பாம்புகள் வருகை: ஊழியர்கள் அச்சம்

புதுச்சேரி, : புதுச்சேரி ரயில் நிலைய பார்சல் அலுவலகத்திற்கு பாம்புகள் வருகையால் ஊழியர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.புதுச்சேரி ரயில் நிலைய முதலாம் பிளாட்பாரத்தில் இயங்கி வந்த பார்சல் அலுவலகம், நான்காம் பிளாட்பாரம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில் நிலைய பகுதிகளில் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.கட்டுமான பணிகள் நடந்து வரும் புதர் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு நான்கு அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று திடீரென பார்சல் அலுவலகத்தில் புகுந்து கம்ப்யூட்டர் டேபிள் கீழே பதுங்கி கொண்டது.அச்சமடைந்த ஊழியர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு துரத்தி விட பாம்பு மீண்டும் புதர் பகுதிக்குள் புகுந்து மறைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு சாரை பாம்பு ஒன்று பார்சல் அலுவலக வாயிலில் உள்ள எடை மெஷின் கீழ் பகுதியில் புகுந்தது. அதையும் ஊழியர்கள் கண்டு துரத்தி விட்டனர்.தற்போது இரைத் தேடி புதர்களில் இருந்து வெளியே வரும் பாம்புகள் பார்சல் அலுவலகத்தில் புகுவதால் பார்சல் அலுவலக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பாம்புகளை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ