மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டது. அதுபோல், அரசு துறையில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், வெளியூர் பணிக்கு சென்றவர்களிடம் இருந்து தபால் ஓட்டு, சேவை ஓட்டுகள் பெறப்பட்டது. சேவை ஓட்டுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டது. புதுச்சேரியில் தபால், சேவை மற்றும் இருப்பிடத்திற்கு சென்று சேகரித்த மொத்தம் 3708 ஓட்டுகள் பதிவானது. இவை, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 5 தனி அறைகளில் எண்ணப்பட்டது.இதில் புதுச்சேரியில் 2520, காரைக்காலில் 642, மாகி 258, ஏனாமில் 288 ஓட்டுகளில், 3451 ஓட்டுகள் மட்டுமே செல்லதக்கதாக எடுத்து கொள்ளப்பட்டது. மொத்த ஓட்டுகளில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 1713, நமச்சிவாயம் 1439, அ.தி.மு.க., தமிழ்வேந்தன் 106, நாம் தமிழர் மேனகா 58 ஓட்டுகளும், 7 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது. தபால் ஓட்டிலும் காங்., அதிக ஓட்டுகளை பெற்றது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago