உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்

மாநில அளவில் வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம்

புதுச்சேரி : மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு குழு கூட்டம் புதுச்சேரியில் நடந்தது.புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு, இந்தியன் வங்கி (எஸ்.எல்.பி.சி) செயல் இயக்குனர் சிவ் பஜ்ரங் சிங் தலைமை தாங்கினார். ஆர்.பி.ஐ., உதவி தலைமை மேலாளர் ராஜ்குமார் நபார்டு வங்கி பொது முகாமையாளர் ஹரிகிருஷ்ணராஜ், களப் பொது மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக, அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.2025 - 26ம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பிரதேசத்திற்கான 9922.33 கோடி ரூபாய் கடன் திறனை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இக்கடன் திட்ட அறிக்கையை, மாநில மற்றும் தேசிய அளலிலான திட்ட அடிப்படையில் தயாரித்து, மாநில, அரசு துறைகள் வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின், பிற நிறுவனங்களுடன் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையிலும், தயாரிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட வளர்ச்சி (நபார்டு வங்கி புதுச்சேரி கிளை) மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை