உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான ஹாக்கி போட்டி; குருவிநத்தம் அணி முதலிடம்

மாநில அளவிலான ஹாக்கி போட்டி; குருவிநத்தம் அணி முதலிடம்

பாகூர் : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற, குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பாராட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில், முதலாமாண்டு ஜூனியர் ஹாக்கி விளையாட்டு போட்டி கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் கோவில்பட்டி அணியும், குருவிநத்தம் அணியும் மோதின. இதில், பூஜ்ஜியத்திற்கு ஒன்று என்ற கோல் கணக்கில், குருவிநத்தம் அணி வெற்றி பெற்று 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி கோப்பையுடன் குருவிநத்தம் திரும்பிய வீரர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி