உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில சிலம்பம் போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு

மாநில சிலம்பம் போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு

வில்லியனுார்: மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வில்லியனுார் ஆசான் வைரக்கண்ணு சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பம் பயிற்சி கூடம் மற்றும் அகில உலக சிலம்பம் கலைக்கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் வில்லியனுார் ஆசான் வைரக்கண்ணு சிலம்பம் பயிற்சி கூடம் மாணவர்கள் 4 தங்கம், 3 வெண்கலம் மற்றும் 7 வெள்ளி பதக்கங்களுடன் வெற்றி பெற்றனர்.சாதனை படைத்த சிலம்பம் மாணவர்களுக்கு விவேகானந்த பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், ஆசான் வைரக்கண்ணு சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் ஆசான் குணாளன் தலைமை தாங்கினார்.தலைமை பயிற்சியாளர் ஆசான் ராஜ்குமார் மற்றும் கடலுார் மாவட்ட கிளை பொறுப்பாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அருள் ஜோதி வரவேற்றார். ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று வாழ்த்தி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை