| ADDED : ஜூன் 06, 2024 02:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு நேரடியாக தேசிய தேர்வு முகமையை அணுகி மாநில மாணவர்களின் நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமென புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் முடிவுகளை கடந்த 4ம் தேதி வெளியிட்டது. இதில், புதுச்சேரி மாநில மாணவர்களின் நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமையை சுகாதாரத்துறை இயக்குனரகம் நேரடியாக அணுகி வெளியிட வேண்டும். மேற்படி, தேசிய தேர்வு முகமையிலிருந்து பெறப்படும் பட்டியலில் புதுச்சேரி மாநிலத்தை சேராத, நிரந்தர இருப்பிடம் கொண்டிராத மாணவர்களின் பெயரை நீக்கிட உரிய நடவடிக்கை சுகாதாரத்துறை எடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக வெளி மாநில மாணவர்கள் போலி ஆவணங்கள் அடிப்படையில் சென்டாக் அரசு ஒதுக்கீடு மற்றும் ஜிப்மர் புதுச்சேரி மாநில ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற முயற்சித்தனர். ஆகையால், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனரகம் கவனத்தோடு மாநில மாணவர்களின் நீட் தேர்வின் தரவரிசை பட்டியலை வெளியிடுவதற்கு முன் பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனை மற்றும் புகார்களை பெற்று, அதில் ஏதேனும் தவறுதலாக அண்டை மாநில மாணவர்கள் பெயர்கள் இருப்பின், அவர்களின் பெயர்களை நீக்கிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.