உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் - கன்னியக்கோவில் சாலை திடீர் மூடல்

பாகூர் - கன்னியக்கோவில் சாலை திடீர் மூடல்

பாகூர்: பாகூர் - கன்னியக்கோவில் சாலை முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை அமைக்கும் பணி விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், பாகூர்- கன்னியக்கோவில் சாலை மேம்பாலம் சந்திக்கும் இடத்தில், வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, நேற்று முன்தினம் காலை திடீரென பாகூர் - கன்னியக்கோவில் சாலையில், நான்கு இடங்களில் தற்காலிக கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, போக்குவரத்தை முழுவதுமாக தடை செய்தனர்.முன்னறிவிப்பின்றி திடீரென சாலை மூடப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்துத் தரப்பினரும், மாற்றுச்சாலையை தேடி பிடித்து செல்லும் நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து தடை மற்றும் மாற்றுப்பாதை குறித்த தகவல் பலகை இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சுற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ