| ADDED : ஜூலை 05, 2024 06:31 AM
புதுச்சேரி : ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி கடற்கரை சாலை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நகராட்சி சார்பில் கடைகள் உள்ளன. அந்த கடைக்கு செல்லும் நுழைவு இடத்தில், டாய்ஸ் உள்ளிட்ட வியாபார கடைகள் இருக்கின்றன. அந்த கடைகளின் பொருட்களை நடைபாதையில் வெளியில் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு கடைகள் வைத்திருக்கும் மற்ற வியாபாரிகள் செல்ல முடியாமல் இடையுறாக உள்ளதாக நகராட்சியினர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில், அங்கு கடைகள் வைத்திருக்கும் மற்ற வியாபாரிகள், கடைகளுக்கு செல்லும் நுழைவு கேட்டை பூட்டி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.