உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் திடீர் தீ விபத்து ரூ. 3 லட்சம் பொருட்கள் சாம்பல்

காரைக்காலில் திடீர் தீ விபத்து ரூ. 3 லட்சம் பொருட்கள் சாம்பல்

காரைக்கால் : காரைக்காலில் மின்கசிவு ஏற்பட்டு கூரை வீடு எரிந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சம்பலானது.காரைக்கால், நெடுங்காடு மேலகாசாகுடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமமிர்தம், 75; விவசாய வேலை செய்து வருகிறார். தனியாக வசிக்கிறார். இவரது வீட்டில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் உள்ளன. மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று நேற்று காலை மின் கசிவு காரணமாக வீட்டு கூரை தீப்பிடித்து எரிந்தது.காரைக்கால், சுரக்குடி பகுதியிலிருந்து வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.இதில், மூங்கில், கிற்று, பிரோ, கட்டில் உள்ளிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தீவிபத்து குறித்து நெடுங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை