உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாலகத்தில் கோடை முகாம்: மாணவ மாணவியர் பங்கேற்பு

நுாலகத்தில் கோடை முகாம்: மாணவ மாணவியர் பங்கேற்பு

புதுச்சேரி : மதி ஒளி அரிச்சுவடி நுாலகத்தில் மாணவ - மாணவியருக்கான கோடை முகாம் நடந்தது.முகாமில், குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், ரப்பர், ஷார்ப்பனர், ஸ்கேல், ஆகியவை வழங்கப்பட்டன.இதில், மண்பாண்ட கலை பொருட்கள் செய்தல், செயற்கை நுண்ணறிவு விரிவுரையாளர் உரை, மருத்துவர் உரை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, மேடைப்பேச்சு, மாறுவேடப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.தவிர, மாணவ, மாணவியரின் பொது அறிவு மேம்படுவதற்கான, தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக வாசித்தல், கையெழுத்து பயிற்சி, அடிப்படை இலக்கணம், சொல் பயிற்சி, நாட்குறிப்பு எழுதும் பயிற்சி, தினசரி செய்தி தாள்கள் வாசிப்பது, பாரம்பரிய மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்தும் விளையாட்டுகள், கதைகள் சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.முகாமின் இறுதி நாளில் புத்தகங்களில் இருந்து மாணவ - மாணவியர் கதைகள் கூறினர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசாக, மண் உண்டியல் மற்றும் சான்றிதழ்களை டி.டி.கே இயக்குநர் ஷங்கர் வழங்கினார். இதில், புதுச்சேரியில் உள்ள பல பள்ளிகளில் இருந்து, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை