உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு புத்தகம் எம்.எல்.ஏ., வழங்கல்

மாணவர்களுக்கு புத்தகம் எம்.எல்.ஏ., வழங்கல்

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி கல்வித்துறை மூலம் அரசு பள்ளியில் இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரிய காலாப்பட்டு செவாலியே செல்லான் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெரிய காலாப்பட்டு எம்.ஓ.எச்.எப்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட பல அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கும் விழா அந்தந்த பள்ளிகளில் நடந்தது.அதில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை பயிலும் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். மேலும், எம்.எல்.ஏ., தனது அறக்கட்டளை மூலம், சொந்த செலவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆயிரம் நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை