மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகம் மூலம் கைக்கிளப்பட்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு, அதிக முட்டையிடும் கோழிகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகத்தின் மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ் கைக்கிளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்று, கோழி வளர்க்கும் முறைகள் குறித்து மகளிர் சுயஉதவி குழுவினருக்கு விளக்கம் அளித்தார்.இதில் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு அதிக முட்டையிடும் தலா 2 கோழிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் ஆதிநாராயணன் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago