உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

நெட்டப்பாக்கம்: மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தேவசேனா தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதந்திரம் வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்களை வழங்கினார்.தொடர்ந்து, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களை சால்வை அணிவித்து வாழ்த்தினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். ஆசிரியை வேலாயி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை