உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

புதுச்சேரி : புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தோழி கலை இலக்கிய அமைப்பு சார்பில் 'செயற்கை நுண்ணறிவு' குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.மைய உதவி பேராசிரியர் ராஜராஜன் வரவேற்றார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.கருத்தரங்கில் சென்னை எமரால்டு பதிப்பகம், தலைமை நிர்வாக அதிகாரி ஒளிவண்ணன் கோபாலகிருஷ்ணன் 'செயற்கை நுண்ணறிவு' குறித்து பேசினார். புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சி பிரிவு பொறுப்பாளர் வாசுகி ராஜாராம் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தீபிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ