உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி - 20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி டஸ்கர்ஸ், டைகர்ஸ் அணிகள் வெற்றி

டி - 20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி டஸ்கர்ஸ், டைகர்ஸ் அணிகள் வெற்றி

புதுச்சேரி, : புதுச்சேரியில் நடந்த, 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், டஸ்கர்ஸ் மற்றும் டைகர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.புதுச்சேரி, சி.ஏ.பி., மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 6 அணிகள் மோதும், 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி. சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று காலை முதல் அரையிறுதி போட்டி நடந்தது. டஸ்கர்ஸ் மற்றும் ஷார்க்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஷார்க்ஸ் அணி, டஸ்கர்ஸ் அணியின் பந்து வீச்சில் திணறி 12.3 ஓவர்களில் வெறும், 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில், டஸ்கர்ஸ் அணியின் ஷிஷீர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய டஸ்கர்ஸ் அணி, 7.1 ஓவர்களில், 1 விக்கெட் மட்டும் இழந்து, 58 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டஸ்கர்ஸ் அணியின் ஷிஷீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.மற்றொரு அரை இறுதி போட்டியில் புல்ஸ் மற்றும் டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டைகர்ஸ் அணி அதிரடியாக ஆடி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. டைகர்ஸ் அணியின் நதீம் கான் 18 பந்துகளில் 57 ரன்களும், ஆகாஷ் கார்கவே 27 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய புல்ஸ் அணி, 17.1 ஓவர்களில், 142 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. டைகர்ஸ் அணி, 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய, டைகர்ஸ் அணியின் ஆதித்ய சுரேஷ் ஆட்டநாயகன் விருது வென்றார். அரையிறுதியில் வென்ற டஸ்கர்ஸ் மற்றும் டைகர்ஸ் அணிகள், இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ