மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும், டி-20 ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், புல்ஸ் மற்றும் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனமும் இணைந்து நடத்தும், ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி, நேற்று சி.ஏ.பி., மைதானத்தில் துவங்கியது.இந்த போட்டியை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரியின் முன்னாள் செயலாளர் சந்திரன் தலைமையில், கவுரவ செயலாளர் ராமதாஸ் துவக்கி வைத்தார். தேர்வாளர் சைஜு மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.இந்த போட்டி வரும், 14ம், தேதி வரை, 2 பிரிவுகளாக நடக்கிறது. இதில் பாந்தர்ஸ், புல்ஸ், ஷார்க்ஸ், டைகர்ஸ், லயன்ஸ், டஸ்கர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கு பெற்றுள்ளன. இந்த போட்டிகள் பேன்கோடு ஆப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. காலை நடந்த முதல் போட்டியில் ஷார்க்ஸ் மற்றும் புல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஷார்க்ஸ் அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஜய் ரோஹிரா 52 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய புல்ஸ் அணி, 19.5 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழந்து, 160 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்க்ஸ் அணியின் அஜய் ரோஹிரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.மதியம் 2 மணிக்கு நடந்த போட்டியில், பாந்தர்ஸ் மற்றும் லயன்ஸ் அணிகள் மோதின, முதலில் ஆடிய பாந்தர்ஸ் அணி, 20 ஓவர்களில், 10 விக்கெட்டுகள் இழந்து, 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாந்தர்ஸ் அணியின் ஆயுத் ஷர்மா, 44 பந்துகளில், 63 ரன்கள் எடுத்தார். லயன்ஸ் அணியின் மணிகண்டன், 3 விக்கெட்டுகள் எடுத்தார்.தொடர்ந்து ஆடிய லயன்ஸ் அணி, 19.1 ஓவர்களில், 138 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லயன்ஸ் அணியின் மோஹித் காலே, 37 பந்துகளில், 56 ரன்கள் அடித்தார். பாந்தர்ஸ் அணியின் ஆயுத் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago