உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி-20 பெண்கள் கிரிக்கெட் போட்டி: டைமண்ட்ஸ்-ஏஞ்சல்ஸ் அணி வெற்றி

டி-20 பெண்கள் கிரிக்கெட் போட்டி: டைமண்ட்ஸ்-ஏஞ்சல்ஸ் அணி வெற்றி

புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்து வரும் டி-20 பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நேற்று டைமண்ட்ஸ்-ஏஞ்சல்ஸ் அணி வெற்றிபெற்றன.நேற்று காலை 8 மணிக்கு நடந்த போட்டியில் ஏஞ்சல்ஸ் அணியும், பிரின்சஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ஏஞ்சல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 123 ரன்கள் எடுத்து. தொடர்ந்து ஆடிய பிரின்சஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்து. பிரின்சஸ் அணியின் அருணா தேவி 60 பந்துகளில் 61 ரன்கள் அடித்தும் பலன் இல்லாமல் ஏஞ்சல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் எடுத்த ஏஞ்சல்ஸ் அணியின் அபிராமி ஆட்டநாயகி விருது பெற்றார்.பிற்பகல் 1.30 மணிக்கு நடந்த போட்டியில் டைமண்ட்ஸ் அணியும், குயின்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய குயின்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 100 ரன்கள் அடித்தது. குயின்ஸ் அணியின் யாஷி பாண்டே 43 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டைமண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 102 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைமண்ட்ஸ் அணியின் கவிஷா 38 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். 2 விக்கெட் மற்றும் 21 ரன்கள் எடுத்த டைமண்ட்ஸ் அணியின் பாயல் பால்மிக் ஆட்டநாயகி விருதை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ