உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை

தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை

அரியாங்குப்பம்: ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, முற்றுகையிட்டு மறியல் செய்த புதிரை வண்ணார் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் புதிரை வண்ணார் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு புதிரை வண்ணார் பெயரில் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் கேட்கும் பெயரில் சான்றிதழ் வழங்க சட்டத்தில் இடமில்லை என முதலியார்பேட்டை தாசில்தார் கூறியுள்ளார்.சான்றிதழ் வழங்காதததை கண்டித்து, புதுச்சேரி தலித் பழங்குடியினர் கூட்டமைப்பு மற்றும் புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் சேர்ந்த, 27 ஆண்கள், 25 பெண்கள் மொத்தம் 52 பேர் நுாறடி சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ