உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு ஊர்வலம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு ஊர்வலம்

காரைக்கால்: காரைக்காலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு காவிரி சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலம் நடந்தது.காரைக்காலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் சங்கத்தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன்,இணை செயலாளர் சோமு வரவேற்றனர்.இதில் காவிரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு உரிய உரிமையை மீட்கவும், கர்நாடகத்திடம் இருந்து உரியதண்ணீரை பெற்று தரக் கோரியும் மேகதாது அணையின் கட்டுமானத்தை சட்டப்படி தடுத்து நிறுத்திடவும், ராசி மணலில் புதிய அணையை உடனே கட்டிடவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkates.P
ஜூன் 11, 2024 22:23

ஆரம்பிச்சுட்டானுக. இங்கே முதல்லே ஆத்து மணல் கொள்ளை போகுது. அதனாலே நிலத்தடி தண்ணி இல்லமே போகுது. அதே பேச மாட்டாங்க.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை