உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை 

கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை 

புதுச்சேரி, : கடன் தொல்லையால் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, சண்முகாபுரம், வி.பி.சிங் நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் ராஜா; டிரைவர். இவரது மனைவி பிரேமா (எ) வள்ளி, 27. இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். ராஜா சென்னையில் தங்கி வேலை செய்கிறார். பிரேமா, மூலக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்.பிரேமாவுக்கும், இரும்பை கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. நேற்று முன்தினம் மாலை பிரேமா வீட்டிற்கு வந்த சதிஷ், கடன் தொகையை கேட்டு வாக்குவாதம் செய்துவிட்டு சென்றார். அடுத்த சில நிமிடத்தில் வீட்டிற்குள் சென்ற பிரேமா வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது மகள், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பிரேமாவின் தாய் ஜெயந்தியை அழைத்து வந்தார். கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. உறவினரை வரவழைத்து கதவை உடைத்து பார்த்தபோது, பிரேமா மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ