உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

புதுச்சேரி : திருமண ஏக்கத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் கார்த்திக், 31; டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். காரத்திக் தனது தாயிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு அவர், வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி பெண் கொடுப்பார்கள் என, கேட்டார்.இதில், வேதனையடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி