உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ மோதி ஊழியர் உயிரிழப்பு தப்பி சென்ற ஆட்டோ டிரைவர் கைது

ஆட்டோ மோதி ஊழியர் உயிரிழப்பு தப்பி சென்ற ஆட்டோ டிரைவர் கைது

புதுச்சேரி: ஆட்டோ மோதி நடந்து சென்ற உணவு டெலிவரி ஊழியர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லித்தோப்பு அருகே உள்ள குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 42; இவர் தனியார் நிறுவன உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணி செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 12:30 மணிளவில், பைக்கை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, சாரம் அவ்வை திடல் வழியாக நடந்து சென்றார்.அப்போது,பின்னால் வேகமாக வந்த, ஆட்டோ அவர் மீது மோதியது. அதில், அவர் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், சாலையோரம் படுக்க வைத்து விட்டு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை, அந்த வழியாக சென்ற கோவில் பூசாரி ஒருவர் அவரை பார்த்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவயிடத்திற்கு வந்த கிழக்கு பகுதி போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, விசாரணை செய்ததில், கதிர்காமம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 40; என தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மனிதநேயம் எங்கே?

நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி பலத்த காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த செயல், மனிதநேயம் இல்லாதை காட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி