| ADDED : மே 30, 2024 04:30 AM
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் நிரவியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த மாணவர் கடந்த 27ம் தேதி பூட்டிய வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். அதில், மாணவரின் சகோதிரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கண்டித்தார். ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், தனது பிறந்த நாள் எனக் கூறி மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணியை திணித்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து நிரவி போலீசார் கொலை மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிந்து, மயிலாடுதுறை வடக்கரையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த 17 வயது சிறுவனை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரியாங்குப்பம் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.இவ்வழக்கில், சிறுவனின் பெற்றோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரவில்லை என இறந்த சிறுவனின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.