உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை கேட்கும் மத்திய அரசு

2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை கேட்கும் மத்திய அரசு

புதுச்சேரி: டாக்டர் போராட்டம் எதிரொலியாக 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை அனுப்ப வேண்டும் என, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கோல்கட்டா மருத்துவ கல்லுாரியில் பெண் டாக்டர் கடந்த 9 ம் தேதி பாலியல் பலாத்கரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் போலீஸ் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி வைத்தது.அதில், டாக்டர்கள் போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இப்போது இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டம் ஒழுங்கு நிலவர அறிக்கையை டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைக்கு பேக்ஸ் அல்லது இ-மெயில், வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ