உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அட்டவணை இன மக்களுக்கு ஒதுக்கிய நிதியில் 40 சதவீதம் கூட அரசு செலவு செய்யவில்லை

அட்டவணை இன மக்களுக்கு ஒதுக்கிய நிதியில் 40 சதவீதம் கூட அரசு செலவு செய்யவில்லை

அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டுபுதுச்சேரி: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து திருபுவனை தொகுதிசெல்லிப்பட்டு, சோரப்பட்டு, சன்னியாசிக்குப்பம், திருபுவனை பகுதியில்அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பிரசாரம் செய்து பேசியதாவது;முரண்பட்ட கூட்டணியில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். கேரள வயநாடு தொகுதியில் கம்யூ., கட்சி பொதுச்செயலாளர் ராஜா மனைவி ஆனி ராஜாவை எதிர்த்து, காங்., தலைவர் ராகுல் போட்டியிடுகிறார்.இதை மறந்துவிட்டு புதுச்சேரி கம்யூ., கட்சியினர், காங்., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பது சுயநலமிக்கது.நமச்சிவாயம் வெற்றி பெற்றால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் எனபொய் கூறுகிறார். பா.ஜ., ஆட்சியில் 60 சதவீத தொழிற்சாலைகள் மூடிவிட்டனர்.அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றிய50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அட்டவணை இன மக்களுக்கு அறிவித்த நிதியில் 40 சதவீதம் கூட செலவு செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ரேஷன் கடை திறக்காமல்,தற்போது திறப்போம் என்பது ஏமாற்று வேலை.அங்கன்வாடி ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம், உள்ளாட்சித்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் ஓராண்டாகியும் வழங்கவில்லை. பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி இருவரையும் தாண்டி நமச்சிவாயத்திற்கு அதிக சொத்து உள்ளது. இவ்வாறு அவர், பேசினார்.கட்சியின் மாநில துணை செயலாளர் காந்தி, ஜெ.,பேரவை மாநில தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை