உள்ளூர் செய்திகள்

சிறுமி மாயம்

பாகூர் : சிறுமி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் சுப்ரமணியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் சவுமியா, 17. இவர் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 19ம் தேதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ