உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவருக்கு கத்தி குத்து

முதியவருக்கு கத்தி குத்து

அரியாங்குப்பம், : முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ், 61; இவர் தனது வீட்டு அருகே வண்டியில் வைத்து கூழ் விற்று வருகிறார். வண்டியை நிறுத்துவது தொடர்பாக, இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது.இந்நிலையில்,நேற்று வழக்கம் போல, வண்டியை நிறுத்தி கூழ் விற்றார். அங்கு வந்த கார்த்தி வண்டியை நிறுத்த கூடாது என சொல்லியும், கேட்கமாட்டாயா என ஆத்திரமடைந்து, கத்தியால், ஜேம்ஸை குத்தினார். அதில் காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்தியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை