உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கனகன் ஏரி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணி கையில் எடுத்த பொதுப்பணித்துறை

கனகன் ஏரி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணி கையில் எடுத்த பொதுப்பணித்துறை

புதுச்சேரி : கனகன் ஏரி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறை கையில் எடுத்துள்ளது.ரெட்டியார்பாளையம் புதுநகரில் பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, கழிவறைகள் வழியாக வெளியேறி 16 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புது நகரில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் கனகன் ஏரி கரையில், பொதுப்பணித்துறையின் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இதனை ஆப்ரேட் ராம்கி என்ற தனியார் நிறுவனம் பராமரித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. பாதாள சாக்கடையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மட்டுமே வர வேண்டும்.ஆனால், கனகன் ஏரி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு, கதிர்காமம் மருத்துவ கல்லுாரியின் மருத்துவ கழிவுநீர், மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவு நீர் அனைத்தும் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றுவதால், அத்தகைய கழிவுநீரை சுத்தம் செய்ய முடியவில்லை.பாதாள சாக்கடையில் எங்கிருந்து தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடப்படுகிறது என்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என, ராம்கி நிறுவனம் பொதுப்பணித்துறைக்கு கடந்த ஆண்டு இறுதியில் அறிக்கை அனுப்பியது. ஆனால் பொதுப்பணித்துறை இதனை கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மீது புதுநகர் மக்கள் புகார் தெரிவித்த நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆப்ரேஷன் பணியை பொதுப்பணித்துறை நேற்று முதல் கையில் எடுத்தது. கனகன் ஏரி பாதாள சாக்கடை வளாகத்தில், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிபுணத்துவம் பெற்ற தனியார் பொறியாளர்களுடன், இளநிலை பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேற்று முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு பணியை மேற்பார்வை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ