மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் வைத்திலிங்கம் இரண்டாவது முறையாக எம்.பி.,யாக வெற்றிப் பெற்றுள்ளார்.கடந்த 1980ம் ஆண்டு நெட்டப்பாக்கம் தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிட்டு தோல்விடையந்தார். 1985ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்., அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சரானார்.பின், 1991ம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றி பெற்று 1996 வரை முதல்வராக பதவி வகித்தார். 1996ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று, 2000 வரை சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.2000ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டு நெட்டப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம், ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் தொழில் மற்றும் மின் துறை அமைச்சரானார். அப்போது, முதல்வராக இருந்த ரங்கசாமி நீக்கப்பட்டு, 2008ம் ஆண்டு மீண்டும் வைத்திலிங்கம் முதல்வரானார்.கடந்த 2011ல் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பு வகித்தார். 2016ல் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் சபாநாயகராக பெறுப்பேற்றார்.பின் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2023ல் மாநில காங்., தலைவராகவும் நியமிக்கப்பட்ட அவர், தற்போது இரண்டாவது முறையாக எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago