உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வலிப்பு ஏற்பட்டு வாலிபர் சாவு

வலிப்பு ஏற்பட்டு வாலிபர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வேலைக்கு வந்த கரூர் வாலிபர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார்.கரூர் மாவட்டம், தான் தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார், 29. இவர் நண்பர்களுடன், புதுச்சேரியில் கட்டுமான வேலைக்கு கடந்த 22ம் தேதி வந்தார். நவீன்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.புதுச்சேரி சோலை நகர் தனியார் விடுதியில் சக நண்பர்களுடன் தங்கிய நவீன்குமாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பார்மசில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.சக நண்பர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை