உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்

வில்லியனுார் : வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 20ம் தேதி திருக்கல்யாணம், ௨௧ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று தெப்ப உற்வம் நடந்தது. அதனையொட்டி மாலை சிறப்பு அபிேஷகம், தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி தெப்பத்தில் எழுந்தருளசெய்து, தெப்ப உற்சவம் நடந்தது.விழாவில், செல்வகணபதி எம்.பி., சிவா எம்.எல்.ஏ., துளவ வேளாளர் மரபினர் தனி அதிகாரி மாணிக்கவேலு, நிர்வாகிகள் சாரம் ரவி, தனசேகர், கணபதி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ