உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராம நவமி உற்சவம் துவங்கி, தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. 12வது நாளான நேற்று காலை 9:00 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், இரவு 9:30 மணிக்கு சீதா கோதண்டராமன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.முன்னதாக மாலை 6:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், நலுங்கு, ரக் ஷ பந்தனம், மாங்கல்ய பூஜை, ேஹாமம், மாங்கல்ய தாரணம், சீர்பாடல், மங்கள ஆர்த்தி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை