மேலும் செய்திகள்
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
1 hour(s) ago | 2
தோல்வியை அறிந்து விட்டனர்!
3 hour(s) ago | 1
விழுப்புரம் : தெற்கு மத்திய ரயில்வே துறையின் குண்டக்கல் கோட்டத்திற்குட்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடப்பதையொட்டி, 2 ரயில்களின் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு மாலை 5:30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16870) வரும் மே 4ம் தேதி வரை காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து மாலை 3:00 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16112) வரும் மே 4ம் தேதிவரை திருச்சானுாரில் நிறுத்தப்படுகிறது.அதே போல், மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட வேண்டிய முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16111) இன்று 28ம் தேதி முதல் வரும் மே 5ம் தேதி வரை திருச்சானுாரில் இருந்து அதிகாலை 4:24 மணிக்கு புறப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago | 2
3 hour(s) ago | 1