உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலாத்துறை அறிவிப்புகள்

சுற்றுலாத்துறை அறிவிப்புகள்

புதுச்சேரி காரைக்காலில் கடற்கரைகள், ஆலங்குப்பம் ஏரி சுற்றுலா தளங்களை சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழும், புகழ்பெற்ற ஆன்மிக தளங்கள் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் பிரசாத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் படகு சேவைக்காக விருப்பமுள்ள நீர் விளையாட்டு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். ஸ்கூபா டைவிங் மற்றும் சுற்றுலா பயணிகள் படகு இயக்குபவர்களுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தங்கும் வசதியுள்ள 33 நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு காரைக்கால் கார்னிவெல், வணிகத்திருவிழா, புத்தாண்டு கொண்டாட்டம், பிரஞ்சு துாதரகத்துடன் இணைந்து பிரஞ்சு திருவிழா கொண்டாடப்படும். முருங்கப்பாக்கத்தில் மின்னணு அருங்காட்சியகம் தனியார் பங்களிப்புன் மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை 3,000 மீட்டர் நீளம் அமைப்பதற்கு அதிக நிதி தேவை என்பதால், ஓடுதளத்தின் திசையை தேசிய நெடுஞ்சாலை 45 நோக்கி அமைக்க தொழில்நுட்ப பொருளாதார சாத்தியகூறுகள் ஆராய இந்திய விமான ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், சர்வதேச நகரங்களுக்கு பெரிய விமானம் இயங்கும் அளவிற்கு விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை