| ADDED : மே 06, 2024 05:04 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடலில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் ஆனத்த குளியல் போடுவது அதிகரித்துள்ளது.புதுச்சேரி கடல் பகுதியில் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் இதில் சிக்கி, உயிரிழக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு இந்து ஆபத்து குறித்து தெரியும். ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது தெரியாததால், கடலில் இறங்கி குளித்து உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது.கடல் சூழல்கள் அதிகம் உள்ள தலைமைசெயலகம், பழைய துறைமுகம் பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினரால் அமைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையை பொருட்படுத்தாமல் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கின்றனர். கோடைக்காலம் தொடங்கியுள்ள சூழ்நிலையில் சராசரியாக தினசரி 70 ஆயிரம் பேர் புதுச்சேரி வந்து செல்கின்றனர்.அவர்களின் பாதுகாப்பைக் கருதி, கடற்கரையில் குளிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகையை மேலும் பல இடங்களில் அமைக்க வேண்டும். அத்துடன் தலைமை செயலகத்தில் இருந்து சீகல்ஸ் வரை 1.5 கி.மீ., நீளத்திற்கு இரும்பு தடுப்பு வைப்பது நிரந்தர தீர்வாக இருக்கும்.உயிரிழிப்பினை தடுக்கும் வகையில் தொடர்ச்சி யாக ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயிரிழப்பினை தடுக்கும் வகையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.