உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விவசாய எந்திரங்களை பழுது நீக்குவது மற்றும் பாதுகாக்கும் முறை குறித்து பயிற்சி முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் தினகரன் முகாமை துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பொறியியல் பிரிவு பாஸ்கர் கலந்து கொண்டு விவசாய எந்திரங்களை கையாளுவது குறித்து விளக்கினார். வேளாண்துறை பொறியியல் பிரிவு மெக்கானிக் ராதாகிருஷ்ணன் டிராக்டரை ஓட்டும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.ஏற்பாடுகளை வேளாண் அலுவலக ஊழியர்கள் குமணன், தம்புசாமி ஆகியோர் செய்திருந்தனர். உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ