உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு

டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு

பாகூர், : கொரவள்ளிமேடு கிராமத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள புதிய டிரான்ஸ்பார்மரை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.பாகூர் தொகுதி, கொரவள்ளிமேடு கிராமத்தில் ராஜகவுரி நகர், குறிஞ்சி நகர், நண்பர்கள் நகர், வரதராஜ பெருமாள் நகர் மற்றும் கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டதின் பேரில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பரிந்துரையின்படி, கொரவள்ளிமேடு கிராமத்தில், 26 லட்ச ரூபாய் செலவில், புதியதாக கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது.இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை