உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்

மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் போக்குவரத்து துறை வலியுறுத்தல்

புதுச்சேரி: பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து இயக்குமாறு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சாலை போக்குவரத்து தொடர்பாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத மூன்றாம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்.மோட்டார் வாகனங்களின் மூன்றாம் நபர் காப்பீட்டு விவரம் VAHAN PORTALல் உடனடியாக கிடைக்கிறது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் இயக்குவது சட்டத்திற்கு முரண்பாடானது.அமலாக்கத்துறை மற்றும் கள அதிகாரிகள் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து, அபதாரங்கள் விதிப்பதுடன், உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.முதன்முறை குற்றத்திற்கு ரூ.2000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை, குற்றம் தொடர்ந்தால் ரூ.4000 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை