| ADDED : ஜூன் 11, 2024 05:51 AM
புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிம்ஸ் மருத்துவமனை அலைய்டு ஹெல்த் சயின்ஸ் மற்றும் செவிலியர் கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மருத்துவ கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். அலைய்டு ஹெல்த் சயின்ஸ் முதல்வர் ஸ்வேதா வரவேற்றார்.மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிம்ஸ் பொதுமேலாளர் ஜார்ஜ் தாமஸ் கலந்து கொண்டு விழாவில் மரக்கன்றுகள் நட்டார்.செவிலியர் கல்லுாரி சார்பாக மூலிகை செடிகள் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் 100க்கும் மேற்பட்ட அலைய்டு ஹெல்த் சயின்ஸ் மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவிகள்'நமது நிலம் நமது எதிர்காலம்' என்பதை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழலை மாசு இல்லாமல் பாதுகாத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி கல்லுாரி வளாகத்தில் துவங்கி பேரணி, கனகசெட்டிகுளம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் கல்லுாரிநுழைவு வாயில் வரை நிறைவடைந்தது.நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் அன்னால் ஏஞ்சலின், காலாப்பட்டு காவல் நிலைய அதிகாரிகள் கிருபாகரன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை பிம்ஸ் சமூக சேவர் மெல்பின் செய்திருந்தார்.