உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான இருவர் கைது

இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான இருவர் கைது

வானுார்: வானுார் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருண்,32; கோர்க்காடை சேர்ந்தவர் அன்பரசன்,28; ரவுடிகளான இருவரும், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம், வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட மயிலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பைக்கில் சென்றபோது, லிங்காரெட்டிப்பாளையம் அடுத்த தமிழகப் பகுதியான செங்கமேடு அருகே மூன்று பைக்குகளில் வந்த கும்பல் இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இவ்வழக்கில் வானுார் போலீசார், 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் ஜாமினில் வந்த வழுதாவூர் கலியபெருமாள் மகன் வினித்,23; பிள்ளையார்குப்பம் எம்.ஜி.ஆர். நகர் சிவக்குமார் மகன் சண்முகவேல்,22; ஆகிய இருவரும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.அதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில், இருவரையும் வானுார் போலீசார் கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை