உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

புதுச்சேரி, : கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.வழுதாவூர் சாலை அய்யங்குட்டிபாளையம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி வருதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு சென்று, பொதுமக்களை மிரட்டிய தருமாபுரியை சேர்ந்த கோபி, 21, என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.அதே போல, முத்திரையர்பாளையம் பகுதி யில் கத்தியை காட்டி மிரட்டிய, அதே பகுதியை சேர்ந்த விஜய், 20; என்பரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை