உள்ளூர் செய்திகள்

டைலர் தற்கொலை

பாகூர்: பாகூர் அருகே டைலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றர்.பாகூர் அடுத்த குருவிநத்தம், தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் பழனி, 61; டைலர். நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த பழனி, தனது மனைவியிடம் வாழ்வதை விட சாவதே மேல் என்று புலம்பி வந்தார்.இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ