உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.32 கோடியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

ரூ.32 கோடியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

புதுச்சேரியில் லாஸ்பேட்டை, முத்திரையர்பாளையம், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர், ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை இன்ஜினியர்ஸ் காலனி, நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி, நகர பகுதி என, 9 மண்டலங்களாக பிரித்து அப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகம், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் மேன்ஹோலில் சேருகிறது. அங்கிருந்து கருவடிக்குப்பம், கனகன் ஏரி மற்றும் திப்ராயப்பேட்டையில் இயங்கி வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு, தினசரி ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலைய மும், தலா 17 எம்.எல்.டி., (170 லட்சம் லிட்டர்)கழிவுநீரை சுத்தம் செய்து வெளியேற்றி வருகிறது.நகர பகுதிகள் விரிவடைந்து வருவதாலும், மக்கள் தொகை நெருக்கம் அதிகரிப்பதால் தற்போதுள்ள3 சுத்திகரிப்பு நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. சில இடங்களில் பாதாள சாக்கடை அமைத்தும், சுத்திகரிப்பு நிலையத்திற்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.இதனால் கூடுதலாக வரும் கழிவுநீரை சுத்திகரிக்க, கூடுதலாக ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி, திப்ராயப்பேட்டையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகிலே ரூ. 32 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி துவங்கி உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 15 எம்.எல்.டி. (150 லட்சம் லிட்டர்) கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக அமைய உள்ளது. விரைவாக நடந்து வரும் கட்டுமான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆணை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ