உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்தது வெயில்

புதுச்சேரியில் மீண்டும் சதம் அடித்தது வெயில்

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று மீண்டும் வெயில் 101.1 டிகிரி ஆக பதிவானது.புதுச்சேரியில் கடந்த பிப்., மாதத்தில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்தது. மார்ச்., ஏப்., மாதங்களில் நுாறு டிகிரி வரை வெப்பம் பதிவானது. மே மாதம் 4ம் தேதி துவங்கி நேற்று 28ம் தேதி வரை கத்திரி வெயில் அடித்தது.இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் லேசான துாரல் மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்த இதமான சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரியின் வெப்ப நிலை 101.1 டிகிரி பதிவானது. அதே வெப்ப நிலை நேற்றும் நீடித்தது. நேற்றுடன் கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ