உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வண்ணார் சமுதாயத்தினர் பெயர் மாற்ற கோரிக்கை 

வண்ணார் சமுதாயத்தினர் பெயர் மாற்ற கோரிக்கை 

புதுச்சேரி, : வண்ணார் சமூதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என மாற்றக்கோரி, தேசிய சமூக நீதி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தேசிய சமூக நீதி கட்சி தலைவர் வெங்கடேஷ்குமார் சட்டசபையில் சந்தித்து அளித்த மனு; கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் வண்ணார் சமுதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என, பெயர் மாற்ற கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது சமூக நீதி கட்சி சார்பில் அதே கோரிக்கை முன் வைக்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டிருந்தது. பின், வெங்கடேஷ்குமார் கூறுகையில், 'வண்ணார் சமுதாயத்தினர் பெயரை ராஜகுலத்தோர் என பெயர் மாற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி