உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாபிராமர் கோவிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை

பட்டாபிராமர் கோவிலில் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை

பாகூர், :' மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில் வரலட்சுமி விரதம் வழிபாட்டையொட்டி, சுவாமி சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது.புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், வரலட்சுமி விரதம் வழிபாடு சிறப்பான முறையில் நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சாரங்கபாணி பெருமாளுக்கு விசேஷே திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி நாச்சியார் மகாலட்சுமி தாயாராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, மகாலட்சுமி தாயாருக்கு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 நாவாவதி குங்குமம் மற்றும் புஷ்ப அர்ச்சனை செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை