மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
6 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
6 minutes ago
குட்கா விற்றவர் கைது
11 minutes ago
புவனகிரி, : புவனகிரி அருகே அருகே ஆலம்பாடியில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையை சரி செய்ய, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.புவனகிரி அருகே ஆலம்பாடியில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், நத்தமேடு உள்ளிட்ட சுற்றுபகுதிகளை சேர்ந்த கால்நடை விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளி கட்டடம் கட்டுதற்காக கால்நடை மருத்துவமனை இருந்த இடத்தை அப்புறப்படுத்தினர். மாறாக பள்ளி இயங்கி வந்த ஓட்டு கட்டத்திற்கு கால்நடை மருத்துவமனையை இடம் மாற்றினர். தற்போது அந்த கட்டடம் பழுதடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் கால்நடைக்கு தேவையான பொருட்களை இருப்பு வைக்க ஊழியர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே அப்பகுதி கால்நடை விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறையினர் நேரில் ஆய்வு செய்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
6 minutes ago
6 minutes ago
11 minutes ago