மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
விழுப்புரம், : பிளஸ் 2 பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டம் 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27ம் .இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் 121 அரசு பள்ளிகள் மற்றும் 72 தனியார் பள்ளிகளில் இருந்து 10,201 மாணவர்கள், 11,012 மாணவிகள் என மொத்தம் 21,213 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களில் 9,224 மாணவர்கள், 10,540 மாணவிகள் என 19,764 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 90.42 சதவீதம், மாணவிகள் 95.71 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 91.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.கலெக்டர் பழனி பேட்டி:'விழுப்புரம் மாவட்டம், கடந்த கல்வியாண்டில் மாநில அளவில் 33வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது 27வது இடத்தை பிடித்து முன்னேறியள்ளது. மாவட்டம் கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 90.66 இருந்த நிலையில், தற்போது 2.51 சதவீதம் கூடுதலாக 93.17 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு 14 அரசு பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் 48 தனியார் பள்ளிகள் என மொத்தம் 68 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி சிறப்பு தேர்வை எதிர்கொள்ளும் விதமாக ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்ரமணியன், மகாலட்சுமி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உடனிருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago