| ADDED : மே 15, 2024 01:08 AM
விழுப்புரம், : கஞ்சா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் இன்ஸ்பெக்டருக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜோதி. இவர், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த பெருமாள் மகன் கார்த்திபன்,38; என்பவரை கைது செய்தனர்.இவ்வழக்கு, விழுப்புரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஜோதி கடந்த சில மாதங்களாக, ஆஜராகாததோடு, சம்மனையும் பெறவில்லை.இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் இன்ஸ்பெக்டர் ஜோதி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.