உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாட்ச்மேன் திடீர் சாவு காவல் நிலையம் முற்றுகை

வாட்ச்மேன் திடீர் சாவு காவல் நிலையம் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரி, மடுகரை சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 58; காலாப்பட்டு இ.சி.ஆர் அருகே உள்ள தனியார் திருமண மண்டப வாட்ச்மேன்.இரவில், வாட்ச்மேனாகவும், பகலில் மண்டப உரிமையாளரின் விவசாய நிலத்தில் வேலையும் செய்து வந்தார். வெங்கடேசன் நேற்று காலை விவசாய நிலத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிடடு, காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, வெங்கடேசனை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.தகவலறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் காலாப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று மதியம் 2:00 மணியளவில் திரண்டு முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்